தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகிறன

“ தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகிறார்கள். ” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்க பட்டுள்ளன.

இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்று முதல் நாள், கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும்படி கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு பணித்தேன்.

தாக்குதல் நடத்தியவர்களை இரு நாட்கள் தேடிய பொலிஸ் தற்போது அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.” – எனவும் சபையில் மனோ கணேசன் இன்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles