லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் நாகசேனை நகரத்தில் இருந்து அக்கரகந்த வரையான பகுதியில் அத்துமீறி காணிகளை அபகரிக்க முயன்ற 7 பேர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணிகள் டில்லி குல்ட்றி தோட்டத்தை சேர்ந்தவை என்றும் தோட்ட நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கைது இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தற்போது லிந்துலை நகரிலிருந்து அக்கரப்பத்தனை நகரம் வரையான டயகம பிரதான வீதி செப்பனிடப்பட்டு வரும் நிலையில் வீதி அபிவிருத்திக்காக அருகாமையில் காணப்படும் பிரதேசங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த காணிகள் டில்லிகுல்றி தோட்ட நபர்களினால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலவாக்கலை நகரில் இருந்து அகர்கந்த முறையான பிரதேசங்களில் கடந்த பல வருடங்களாகவே வெளி நபர்களினால் காணிகளில் அத்துமீறி கையகப்படுத்தி அங்கு விவசாயத்தையும் வியாபாரத்தையும் முன்னெடுத்து வரும் நிலையில் சில வர்த்தக நிலையங்களையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து குடியேறிய நபர்களும் உள்ளடங்குவர்.
கௌசல்யா