தோட்ட தொழிலாளர்கள் கம்பனிகளின் அடிமைகள் அல்லர்

“ பெருந்தோட்ட தொழிலாளர்களும் இலங்கையர்கள்தான், அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடிமைகள் அல்லர். தேர்தல் காலம் என்பதாலேயே பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டத்தை சிலர் அரசியலாக்கியுள்ளனர்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், செயலகத்தில மலையக எம்.பிக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“ காணி உரிமை வழங்கும் திட்டத்தில் தடங்கல் ஒன்று ஏற்பட்டு இருப்பது பற்றி அனேகமானோர் அறிந்து இருப்பீர்கள். அத் தடங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களினால் ஏற்பட்டதே ஆகும்.

சுமார் 7, 500 இளைஞர்கள் கொழும்பில் வேலை செய்கின்றனர். காணி உரிமை இல்லாத இடத்தில் எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும். வீட்டு உரிமை வேறு காணி உரிமை வேறு அதன் உண்மைத் தன்மையினை நாம் புரிந்துக் கொண்டாக வேண்டும். வீடு கட்டிய பின் தான் காணி உரிமை வழங்க வேண்டுமாயின் அது காணி உரிமை இல்லை அதற்கு பெயர் வீட்டு உரிமை.

நான் கூற வருவது என்னவென்றால் இதற்கென ஒரு சட்டத்தை நிர்ணயித்து, அந்த சட்டம் மூலம் மக்களுக்கு காணியினை வழங்குவதே ஆகும். இது தான் எங்கள் திட்டம். அந்த சட்டம் மூலமாக மக்கள் வசிக்கும் இடத்தை ஒப்படைத்தல் செய்வதாகும்.

அதாவது, கிராமங்களாக மாற்றம் செய்ய போகிறோம். லயன் அறைகளுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. இவற்றை கிராமங்களாக மாற்றப் போகின்றோம். கிராமங்களாக மாற்றினால் மட்டும்தான் மக்களுக்கு தேவையான அரசாங்க வரப்பிரசாதங்கள் கிடைக்கும். இன்றைக்கு அனேகமான மக்களுக்கு தெரியும்.

சமூர்த்தியாக இருக்கட்டும் வேறு வேறு அரசாங்க வர பிரசாதங்களாக இருக்கட்டும் இன்றைக்கு அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றமைக்கு காரணம் அரசியல் சூழ்ச்சி கிடையாது, கிடைக்காத காரணம் தோட்டப் பகுதிகள் பெருந்தோட்ட கட்டுப்பாட்டுக்குள் வருவதே ஆகும்.

நாம் இந்த சட்ட மூலத்தில் தெளிவுப்படுத்த முனைவது, இவர்கள் இலங்கையர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடிமைகள் இல்லை. இதை சிலர் புரிந்துக் கொள்ளாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கிறார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் இது தேர்தல் காலம் அரசியலாக தான் பார்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் இந்திய அரசாங்கம் மூலமா 28000 வீடு கட்டி இருக்காங்க. அதே இந்திய அரசாங்கம் கூட நமக்கு 4000 வீடுகள் வழங்கி இருக்கும்போது பத்து வருடங்களாக இதனை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டு இருக்கிறோம் காரணம் மக்களுக்கு காரணி உரிமை இல்லாமையே. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles