தோட்ட முகாமையாளர் அடாவடி – மொக்கா தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா, மொக்கா தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளரின் அடாவடி தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துமே மொக்கா தோட்ட காரியாலய வளாகத்தில் குறித்த போராட்டம் இன்று (23) முற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட தோட்டத்தொழிலாளர்கள் கூறியவை வருமாறு,

” தோட்ட முகாமையாளரால் எமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது. கடந்த நான்கு மாதங்களாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 20 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டு அரைநாள் பெயர் போடப்படுகின்றது. இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிற்சாலை கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொழுந்து வெளி இடங்களுக்கு அனுப்படுகின்றது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை இல்லாமல்போயுள்ளது. எனவே, எமக்கு வேலை வழங்கப்படவேண்டும். முழு நாள் பெயர் வழங்கப்படவேண்டும். தொழில் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. தோட்ட முகாமையாளரின் அடாவடிதனமாக செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.” – என்றனர்.

– -மஸ்கெலியா நிருபர்கள் –

Related Articles

Latest Articles