நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுவிப்பு

போராட்டக்காரர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமிதா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, அவரை செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles