நாவலப்பிட்டியவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவொன்று நேற்று மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
ஆட்டோவில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக அதனை ஓட்டுநர் செலுத்தி சென்ற நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ பற்றி எரிவதை அவதானித்த பிரதேசவாசிகள்,பொலிஸார் ஒன்றிணைந்து நீர் ஊற்றி அணைக்க முயன்றபோதும் ஆட்டோ தீக்கிரையானது.
இந்த சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.