நண்பனை கொலை செய்து வெளிநாடு செல்ல முயன்ற நபர் விமான நிலையத்தில் கைது

தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளானர்.

இந்த சம்பவம் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒன்றாக உணவருந்திய பின்னர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு வெளிநாடு செல்வதற்காக 2 நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் அம்பலாங்கொட ஹிரேவத்தையைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ஜே.ரொஷான் குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles