அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என காங்கிரஸின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது.
நாட்டு மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கயை ஏற்றே இ.தொ.கா. இந்த முடிவை எடுத்துள்ளது.
அத்துடன், அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் எனவும் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.