ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள நம்பிக்கை யில்லாப் பிரேரணைகளை நாடாளுமன்றில் எடுப்பது குறித்துத் தீர்மானிப்பதை சபாநாயகர் தள்ளிப் போட்டிருக் கிறார் எனத் தெரியவருகிறது.
மேற்படி இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆங்கில மொழி மூல வாசகத்தில் அமைந்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது.
மூன்று மொழிகளிலும் அதன்மொழிபெயர்ப்புடன் அதன் வாசக வடி வங்களைப் பெற்ற பின்னரே அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்த
தீர்மானத்தை சபாநாயகர் எடுப்பார் எனத் தெரிகின்றது.
இன்று காலை நாடாளுமன்றக் கட் சித் தலைவர்களின் கூட்டத்தில் இதனை சபாநாயகர் கோடி காட்டினார் எனக் கூறப்பட்டது.
இந்தப் பிரேரணைகளை உடன டியாக நாடாளுமன்றத்தில் எடுப்பதற்காக நாடாளுமன்ற நிலையியற் கட்டளை களை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்து எதிர்க் கட் சிகள் இன்றைய கூட்டத்தில் பிரஸ்தா பித்தன எனத் தெரியவருகிறது.
எது,எப்படி என்றாலும் இந்த பிரேர ணைகளின் தமிழ்,சிங்கள வடிவங்கள் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்த பின்னர் அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கோடி காட்டினார் என்று அறியமுடிகின்றது.










