நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் – மொட்டு கட்சி சூளுரை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – என்று சூளுரைத்துள்ளார் ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் , போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டில் எல்லா இடங்களிலும் எரிவாயு அடுப்பு வெடிக்கின்றது என்ற செய்தி உருவாக்கப்பட்டது. ஊடகங்களிலும் அந்த செய்திகள் வெளியாகின. ஆனால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இல்லாமல்போகின.

அதேபோல சுகாதாரதுறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல பொறுப்புகூறவேண்டும் என விஞ்ஞானப்பூர்வமாக எதுவும் நிரூபனமாகவில்லை. அன்றுபோல் இன்றும் சூழ்ச்சிகள் இடம்பெறக்கூடும்.

எனவே, சுகாதார அமைச்சர் பக்கம் நாம் இருப்போம். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles