நவம்பர் 01 முதல் முன்கள துறைகளில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர்

நவம்பர் 01 இற்கு பின்னர் முன்கள துறைகளில் பணியாற்றுவோருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசியாக   பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய சுகாதாரப் பிரிவினர், முப்படை, பொலிஸார், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட முன்கள ஊழியர்களுக்கு 3ஆவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்காக, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால்  14.5 மில்லியன் பைசர் தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முன்கள பணியாளர்களைத் தொடர்ந்து, முன்னுரிமையின் அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30-60 வயதுக்குட்பட்ட புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுடன் கூடியவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஏனைய பிரிவினருக்கு இவ்வாறு 3ஆவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பெற்றுக் கொண்ட தடுப்பூசியை கருதாது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கமைய, 3ஆவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles