“நாங்கள் வெளியேறினால் அரசு ஆட்டம் காணும்” – சுதந்திரக்கட்சி எச்சரிக்கை

” அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஆட்சி கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும். எமது வெளியேற்றம் சாதாரண சம்பவமாக இருக்காது. சாதாரண பெரும்பான்மையைக்கூட அரசு இழக்க நேரிடும் ” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

கட்சி மறுசீரமைப்பு, எதிர்கால அரசியல் நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த சமரவீர கூறியவை வருமாறு,

” அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்படவில்லை. எனினும், கட்சி அவ்வாறானதொரு முடிவை எடுக்கும் பட்சத்தில் பதவிகளை துறந்துவிட்டு, வெளியேறுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

நாம் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு கொண்டுசெல்ல இடமளியோம். அதேபோல எமது முடிவு சஜித், ரணில் மற்றும் இதர தரப்புகளுக்கும் சாதகமாக அமைந்துவிடாது. அவர்களை பலப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை. அக்கட்சிகளுடன் இணையவும் மாட்டோம்.

விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களை ஆரம்பத்தில் வெளியேறுமாறு வலியுறுத்தினர். தற்போது சுதந்திரக்கட்சியை இலக்கு வைத்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்கு முற்படுகின்றனரா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேறினால் மொட்டு கட்சியில் உள்ளவர்களும் வெளியேறுவார்கள். நாம் வெளியேறும் நாளில் எண்ணிக்கையை அறியலாம். வெளியேறுவதாக இருந்தால் வெறுமனே 14 பேர் மட்டும் வெளியேறமாட்டோம். அரசு மூன்றிலிரண்டு அல்ல சாதாரண பெரும்பான்மையைக்கூட இழக்கும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles