நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

முற்பகல் 9.30 மணி முதல் 10. 30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று இடம்பெறும்.
அதன்பின்னர், 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து முற்பகல் 10.45 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை எதிர்க்கட்சி கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்” குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும். 7 ஆம் திகதியும் குறித்த விவாதம் தொடரும்.
நாளை மறுதினம் 08ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் 11 மணி வரை கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு (130,131) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். அதன்பின்னர் 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் மு.ப 11 மணி முதல் பி.ப 5.30 மணிவரை நடைபெறும்.
அதேவேளை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக எதிர்வரும் 09ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.










