மேற்காசிய பதற்றத்துக்கு அமெரிக்க ஆக்கிரமிப்பே காரணம்: ரஷ்யா குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற சர்வதேச அணுசக்தி முகமையின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான எந்தவொரு சுமுகமான தீர்வையும் ரஷ்யா ஆதரிக்கும்.

பிராந்திய அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா யதார்த்தமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles