அநுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.
“வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அவற்றை வெளிப்படுத்துவதற்காகவே கூட்டத்தில் பங்கேற்கின்றேன்.” எனவும் அவர் கூறினார்.










