நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில் செலவுகளை குறைக்க ஜனாதிபதி உத்தரவு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரை நிகழ்த்த வருகை தரும் ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் குதிரைப்படை அணிவகுப்பு மற்றும் பவனிகளை நடத்த வேண்டாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் எளிமையான முறையில் அந்த வைபவத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்ர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles