ஜுன் 16 ஆம் திகதிக்கு பின்னர் நிச்சயம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதியாகக் கூறுகின்றேன் – என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
ரஷ்ய கேஜிபி என்ற உளவு அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதால் எல்லா விடயங்களும் முன்கூட்டியே தெரியவரும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ரஷ்ய போருக்கு கூலிப்படைக்கு ஆட்கடத்தும் பிரதான சூத்திரதாரி உதயங்க வீரதுங்க என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். ஆனால் ரஷ்யா சென்றுள்ள தரப்பினரை நாட்டுக்கு அழைத்துவரக்கூடிய ஆளுமை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார் .
இதற்காக தனக்கு தூதுவர் பதவி தேவையில்லை, எனினும், இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டால் நிச்சயம் இதனை செய்ய முடியும் எனவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டார்.
