நாட்டில் நெருக்கடி உச்சம்! பதவி விலகுமா அரசு?

” இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார நெருக்கடியும் உருவாகியுள்ளது. மறுபுறத்தில் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. நிர்வாகம் தோல்வி கண்டுள்ளது. எனவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதால் இப்பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அவ்வாறு தீர்ந்தால் அவர்கள் நீக்கப்பட்டமை சிறந்த முடிவாக அமையும்.

எனவே, முழுமையான அரசும் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்போது தகுதியான தரப்பு நாட்டை ஆளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles