” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிலர் நடந்துகொண்டதால் அடுத்த ஒரு மாத காலப்பகுதி என்பது தீர்க்கமானது.” – என்று கொரோனா வைரஸ் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதை காணமுடிந்தது. இதன் தாக்கம் இன்னும் இரு வாரமளவிலேயே தெரியக்கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே, அடுத்துவரும் 3 வாரப்பகுதி அல்லது மாதம் என்பது எமக்கு மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
அடுத்த மூன்று வாரங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.