‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 60 வயதைத்தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

1.கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தவேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனையில்
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உயர் இரத்த அழுத்தம், நீரிழவு நோய் ஆகியவற்றுடன் கொவிட் தொற்றும் ஏற்பட்டமையே மரணத்துக்கு காரணம்.

2.புத்தளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் உயர்குருதி அழுத்தமே மரணத்துக்கு காரணம்.

3.ரத்மலான பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆணொருவர் உயரிழந்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
மரண பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொரோனா தொற்று ஆகியனவே மரணத்துக்கு காரணம்.

4.கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்கு காரணம்.

5.கொழும்பு 13 ஐச் சேர்ந்த 64 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்பட்ட நோயே மரணத்துக்கு காரணம்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles