நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு நிலையம் பத்தரமுல்லை ஜயந்திபுர மாவத்தையில் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றதுடன், இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அவரிடம் வினவப்பட்டதுடன், ஜனாதிபதி வேட்பாளர் தயார் என அவர் பதிலளித்தார்.
