இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடொன்றில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என வெளியான தகவல்களை, மைத்திரி தரப்பு நிராகரித்துள்ளது.
தென்கொரியாவுக்கு செல்வதற்கே மைத்திரி உத்தேசித்துள்ளார் எனவும், ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ முனின் குடும்பம், தென்கொரியாவில் செல்வாக்கு மிக்க குடும்பமாகும். அக்குடும்பத்தின் ஆதரவுடனேயே மைத்திரி செல்லக்கூடும் எனவும் தகவலகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே இந்த தகவலில் உண்மை இல்லை எனவும், மைத்திரிபால சிறிசேன நாட்டிலேயே இருப்பார் எனவும் சுதந்திரக்கட்சி உறுப்பினரான சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தகவலை மைத்திரியும் நிராகரித்துள்ளார்.










