கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சுகாதாரப் பிரிவினரின் கருத்துக்களைப் பரிசீலித்து, முழுமையான முடக்கத்தை அமுல்படுத்துமாறும் மாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.