நுவரெலியா மாவட்டத்தில் மாலைவேளையில் தற்போது கடும் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினமும் அடை மழை பெய்தது. இதனால் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் சந்தியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள நீர் நிரம்பியது . சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமா நானுஓயா கெல்ஸி மற்றும் மஹாஎலியா தோட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியது.
இந்நிலையில் இன்று (19) காலை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் சந்தியில் பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ள நீர் வழிந்தோடியுள்ளதால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் குறித்த பகுதியில் அதிகமாக சேறு கலந்த மண் குவிந்து காணப்படுகின்றது
அத்துடன் சீரற்ற வானிலை, தொடர் கனமழையால் நானுஓயா டெஸ்போட் பகுதியும் வெள்ளக்காடானது பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளன இதனால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளர் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
