நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையிலான கேபிள் கார் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கான குழு கூட்டத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மலையகத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதன் மூலம் ஏராளமான வருமானத்தைப் பெற முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலைகளில் கொழுந்து பறிக்கும் தொழிலாளிகள் அதனை ஒரு இடத்தில் சேர்க்க அவற்றை தொழிற்சாவைகளுக்கு கொண்டுவருவதற்கு ஆரம்ப காலத்தில் கேபிள் கார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆங்கிலயேர் காலத்தில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் பிற்காலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்ட நிலையில் கேபிள் கார் திட்டம் முற்றாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தற்போது இந்த கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.