‘நானுஓயா வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை வழங்க நடவடிக்கை’

பொது மக்களின் நன்மை கருதியும் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நானுஒயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 16 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட நானுஒயா பிரதேச ஆரம்ப வைத்தியசாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது எமது பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய ஒரு தொகை பணத்தை முறையாக செலுத்தப்படாமை காரணமாக அவர்களுக்கான நீர் உட்பட ஏனைய சேவைகளை பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பாக இன்று (21.09.2021)நடைபெற்ற  பேச்சுவார்த்தையின் பின்பு சுகாதார தரப்பினருடன் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் குறித்த ஆரம்ப வைத்தியசாலைக்கான நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் நீர் இணைப்பு உடனடியாக பெற்றுக் கொடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுடன் பொது மக்களின் நன்மை கருதியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டாதாகவும் பிரதேச சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிரபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles