நாரம்மல துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு – அதிகாரிகள் இருவரும் பணி நீக்கம்!

நாரம்மல பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்தத் தொகையை இன்று வழங்கினார்.

குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவரின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர், விசாரணை முடிவடையும்வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இருவரும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related Articles

Latest Articles