நாளை புலமைப்பரிசில் பரீட்சை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 34 ஆயிரத்து 690 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர் – என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

2 ஆயிரத்து 894 பரீட்சை நிலையங்களும், 494 தொடர்பாடல் -இணை அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

” இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி இரண்டு வினாத்தாள் முதலாவதாகவும், பகுதி ஒன்று வினாத்தாள் இரண்டாவதாகவும் வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் நலன்கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல பாடசாலையொன்றில் மூன்று பரீட்சை நிலையங்கள் இருந்தால் அந்த மூன்று நிலையங்களிலும் உள்ள கடிகாரங்கள் ஒரேநேரமாக இருக்க வேண்டும். பொறுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் கடிகாரமும் அந்த நேரத்துக்கு ஒத்ததாக – சரியான நேரமாக இருக்க வேண்டும். ” – எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles