நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை நகரில் இயங்கிவரும் வர்த்தக நிலையங்களை நாளை 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 6.00 மணிவரை மூடி வைக்க மடுல்சீமை வர்த்தக சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் எம்.தினேஷ்குமார் தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் ஏ.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பசறை தேர்தல் தொகுதியில் லுனுகலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
