நாளை(16) முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு

நாளை(16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

கொழும்பு வர்த்தக வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles