மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் பற்றியும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமக்கு நியாயமான சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
மஸ்கெலியா நிருபர் பெருமாள்