நாவலப்பிட்டியவில் ஆட்டோ விபத்து – ஒருவர் பலி! மற்றுமொருவர் படுகாயம்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாவலப்பிட்டிய ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோ நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியை சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது – 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுங்காயமடைந்த மற்றவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles