நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாவலப்பிட்டி நகரில் மீறப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதால் ஏனைய வர்த்தகத் தொழிலில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள் தமது நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என்ற அபிப்ராயத்தில் உள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் நாவலப்பிட்டி நகரில் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மாத்திரம் திறந்திருந்தன.
எனினும் இன்று காலை முதல் திடீரென்று நாவலப்பிட்டி நகரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பகுதி அளவில் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு வாகனங்களும் வீதியோரங்களில் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி நகரில் பொலிசாரை காணக்கூடியதாக இல்லை.
இந்த நிலையில் இன்று நாவலப்பிட்டி நகரில் கொரோனா சுகாதார நடவடிக்கைகளும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டமும் மீறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.