சீரற்ற காலநிலை செய்த மோசம் – வடக்கில் 600 கால்நடைகள் சாவு – மேலும் 400 கால்நடைகள் சாப்படுக்கையில்

நாட்டில் அசாதரணமாக நிலவும் கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லை தீவு மாவட்டங்களில் சுமார் 600 கால்நடைகள் ஒரேடி

யாக சாவடைந்து இருக்கின்றன. மேலும் 400 கால்நடைகள் வரை சாப்படுக்கையில் கிடக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது

உத்த்தியோக பூர்வமாக செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 367 கால் நடைகள் உயிரிழந்துள்ளன என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி.வசீகரன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அதிக குளிருடன் கூடிய காலநிலையின் காரணமாக ஒரே நாளில் அதிக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 கால்நடைகள் உயிரிழந்துள்ள அதேநேரம் மேலும் 162 கால் நடைகள் முழு மையாக இயங்காத நிலையில் வீழ்ந்துகிடக்கின்றன. இருப்பினும் சிகிச்சைகள் இடம்பெறுகின்றது.இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 கால்நட்டைகள் உயிரிழந்துள் ளன. 159 கால்நடைகள் படுக்கையில்

விழுந்து கிடக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 மாடு

களின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம் 17 மாடுகள் அதிக நோய் வாய்ப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பிரி

வில் வரும் மருதங்கேணியில் ஒரு பட்டியில் மட்டும் 58 உயர் இன ஆடுகள்கூண்டோடு மரணித்துள்ளன.

இதேநேரம் அதிக நோய்வாய்ப்பட்ட எஞ்சிய 338 கால் நடைகளிற்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருள்

களைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் நெருக்கடி நிலை அல்லது தட்டுப்பாடு நிலவுவதாக கால் நடை வளர்ப்பு உரிமை

யாளர்கள் எமக்கு தெரிவிக்கும்போது எம் மாலும் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என்றார் பணிப்பாளர் சி.வசீகரன்.

Related Articles

Latest Articles