கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுமாறும் எடுத்துரைத்தார்.










