அடுத்த ஐந்து வருடங்களில் நுவரெலியா மாவட்டத்தை அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி செய்வது உறுதி என்று நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நுவரெலியாவிற்கு சென்று திரும்பிய நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகிப்பார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனவே, அவருடன் இணைந்து பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு தங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களுக்கு இலகுவாக அபிவிருத்தியை எடுத்துவர முடியும். அதன்படி நுவரெலியாவில் அடுத்த ஐந்து வருடங்களில் கணிசமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் இந்த அபிவிருத்திகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கான திட்டங்கள் தம்மிடம் இருக்கின்ற நிலையில், அதற்கான மக்கள் அங்கீகாரம் மட்டுமே தற்போது தேவையாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.