நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சிசுவின் சடலம் முழுவதும் சிதைவுண்ட நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிசுவின் சடலத்ததை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவியுடனும் இப்பகுதியில் உள்ள பிரதேச தாதியர்களின் உதவியுடன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
