நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக இன்றும் போராட்டம்!

நுவரெலியாவில் உள்ள பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (30) மதிய உணவு இடைவேளையின்போது போராட்டம் இடம்பெற்றது.

நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள புராதன பெறுமதிமிக்க நுவரெலியா தபால் நிலையத்தை எவருக்கும் விற்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட நுவரெலியா தபால் ஊழியர்கள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

” எமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி பாரிய போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம்.” – எனவும் குறிப்பிட்டனர்.

செ.திவாகரன் டி.சந்ரு

Related Articles

Latest Articles