நுவரெலியா பிரதான தபால் நிலைய சேவைகள் ஸ்தம்பிதம்

தபால் ஊழியர்கள் நேற்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இப்போராட்டத்தால் நுவரெலியா பிரதான தபால் நிலையம் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் தேங்கியுள்ளன.

தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் என பல கோரிக்கைகளை முன் வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் சுகவீன விடுமுறை அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நன்மை கருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும்,பதிவு தபால் பாரம்ஏற்கும் பிரிவு மாத்திரம் இயங்குகின்றது.
இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஆ.ரமேஸ்-

Related Articles

Latest Articles