நுவரெலியா மாநகர சபையையும் கைப்பற்றுவோம் – முன்னாள் முதல்வர் சூளுரை

நாட்டில் எத்தனை பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. இதனை பொருத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே எத்தனை தடைகள் வந்தாலும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினரும் முன்னாள் நுவரெலியா மாநகர சபையின் முதல்வருமான மகிந்த தொடம்பே கமகே தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதைகள் தற்பொழுது காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. நான் நுவரெலியா மாநகர சபையின் நகர முதல்வராக இருந்த பொழுது நுவரெலியா நகரின் அநேகமான பகுதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்தேன்.

ஆனால் அதற்கு பின்பு நுவரெலியா மாநகர சபையை பொறுப்பேற்றுக் கொண்ட ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஆட்சியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை.தற்பொழுதும் அதே நிலையே தொடர்கிறது.

ஆனால் நான் இதனை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.காரணம் நான் நுவரெலியாவில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் இந்தந கரதை;தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

இதன் காரணமாக நான் கடந்த காலங்களில் பல அமைச்சர்களையும் சந்தித்து அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கலந்துரையாடினேன்.இதன் விளைவாக பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பாதை அபிவிருத்திக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக என்னிடம் கூறினார்.

அதன்படி தற்பொழுது நுவரெலியா நகரில் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த பாதைகள் அனைத்தையும் மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்பொழுத வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

அநேகமாக அடுத்த வருடம் ஆகின்ற பொழுது நுவரெலியா நகரின் அனைத்து பகுதிகளும் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுவிடும். இந்த கொரோனா பிரச்சினை முடிவிற்கு வந்த பின்பு சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படுகின்ற பொழுது பாதை அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானதாகும்.

இன்று நுவரெலியா மாநகர சபையால் செய்ய முடியாத பல வேலைகளை நான் ஒரு உறுப்பினராக இருந்து செய்து வருகின்றேன். அதற்கு காரணம் நாங்கள் அரசாங்க கட்சியுடன் இருப்பதே. எதிர்வரும் காலத்தில் நுவரெலியா மாநகர சபையை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles