நுவரெலியா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 16 தேசிய பாடசாலைகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தொடர் முயற்சியின் பலன்

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கா நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

இதன்பின்னர், நுவரெலியா மாவட்ட தேசிய பாடசாலை விவகாரம் குறத்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த வாரம் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் முதன்முறையாக 16 தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை நுவரெலியா தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல்

Highlands college
Bosco’s college
Talawakala TMV
Holbrook TMV
Kotagala TMV
St Mary’s college – Bogowantalawa
Norwood TMV
St Joseph’s college – Maskeliya
Horncey college
Bloomfield college
Ragala TMV
Al Minhaj MV
Punduloya TMV
Holy trinity TMV
Methodist college
Maraya TMV

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles