நாட்டில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவில் உள்ள பனங்கம்மன கிராம சேவகர் பிரிவும், திருகோணமலை மாவட்டத்தில் சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.