நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் கொரகோய கீழ் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
