நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு புதிய தண்ணீர் பௌசர் கையளிப்பு

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பௌசரொன்று, கொய்கா (KOICA) மற்றும் யூ.என் ஹெபிடாட் (UN – HABITAT ) நிறுவனங்கள் ஒன்றினைந்து வழங்கியுள்ளன.

இதற்கான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட செயலாளர், கொய்கா நிறுவனத்தின் பணிப்பாளர் கிம் , யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் முகாமையாளர் சலிம் கறீம் சாடா மற்றும் இரு நிறுவனத்தின் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles