நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்
நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற சிறுவனே உயிரிழநதவராவார்.
தாயாரும் தந்தையாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் இன்று வியாழக்கிழமை காலை தூக்கிட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த
நிலையில் காணப்பட்ட சிறுவனை உடனடியாக மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழநததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்










