நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்!

சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி – பாரத் அருள்சாமி தெரிவிப்பு !

மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் நேற்று மத்திய மாகாண ஆளுநர் அதிமேதகு லலித் யூ கமகே தலைமையில் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமமும் பாரத் அருள்சாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக தலா 50000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க முடிவெடுக்கபட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுவரையில் மத்திய மாகாணத்தில் 725 மரணங்கள் கொவிட் தொற்றின் காரணமாக ஏற்றப்பட்டுள்ளன எனவும் அதில் மெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்ப்பட்டோரே ஆவர்.

இதுவரையில் மத்திய மாகாணத்தில் 28723 தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் எமது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 50000 தடுப்பூசிகள் நுவரேலியா மாவட்டத்திற்கும் 50000 தடுப்பூசிகள் மாத்தளை மாவட்டத்திற்கும் கிடைக்கும் நிலையில் 60 வயதுக்கு மேற்றப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க கூடியதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார பிரிவினர் நுவரேலியா மாவட்டத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வமாக பங்கேற்றத்துடன் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்ய உதவிய அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும் இவ் வாரத்தில் இத்தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்க பட்ட போதும் சுகாதார ஊழியரகளின் போராட்டம் காரணமாக சற்று தாமதமாகுவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பாரத் தடுப்பூசிகள் வழங்குவதற்க்கான அனைத்து வசதிகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வழங்க நாம் முன்நின்று செயல்படுவோம் அதே வேலை எமது பிரஜாஷக்தி கொவிட் தடுப்பு செயலணி ஊடாக போக்குவரத்து ஆவணங்கள் தயார்படுத்தல் அரச சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாம் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார். அதே வேளையில் பி சி ஆர் பரிசோதனைகளில் ஏற்படும் காலதாமதங்களை குறைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இக் கூட்டத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நாளக கோட்டேகொட கலந்து கொண்டதுடன் கண்டி நுவரேலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட செயலாளர்கள் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் உட்பட வைத்திய பணிப்பாளர்கள், இராணுவ கட்டளை தளபதி பிரதி பொலிஸ் அதிபர் என பலர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles