நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: ட்ரம்ப்

 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய, 2022ல் முயற்சித்தார்.

இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தும் என்றும், இணையும் முயற்சியை கைவிடாவிட்டால் போர் தொடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

இதனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் இறந்து உள்ளனர்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், இன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

உக்ரைன் ஜனாதிபதி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம்.

அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles