நோர்வூட்டில் இம்முறையும் சேவல் கொடி பறக்கும்: ஜீவன் நம்பிக்கை

கடந்த முறையைபோலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

2025 உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், இ.தொ.கா தோட்ட தலைவர், தலைவி, பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பானது ஹட்டன்-டிக்கோயா நகர சபை அபுசாலி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் சேவல் சின்னத்தை வெற்றிபெற வைத்து கடந்த காலங்களில் எவ்வாறு நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிப் பெற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடியினை பறக்க விட்டீர்களோ அதே போலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

ஏற்கனவே உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதைய வேட்பாளர்கள் அனைவரும் கடந்தக்கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு இம்முறை போட்டியிடுகின்ற புதிய வேட்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
மேலும் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோமே தவிர, எமக்கு சேவை செய்வதற்காக மக்கள் இல்லை.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், உபத்தலைவர் அர்ஜுன் ஜெயராஜ்(இளைஞர் பிரிவு), கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டார்கள்.

இம்முறை நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles