நோர்வூட் கெசல்கமுவ ஓயாவிலிருந்து 5 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் – சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

டிலரி கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய ஜந்து பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் தனலெட்சுமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நித்திரைக்குசென்ற இப்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த பெண் கெசல்கமுவ ஒயாவில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு உறவினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles