நோர்வூட் நகரில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரும், போதைப்பொருள் வாங்குவதற்கு வந்திருந்த மூவரும் இன்று முற்பகல் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலலொன்றின் அடிப்படையில், நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.ஏ.சி. ஆர் பிரேமலால் தலைமைல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தவரும், வாங்க வந்தவர்களும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா 150 கிராம், ஐஸ் போதைப்பொருள் பக்கெட்டுகள், ஹெரோயின் ஒரு கிராம் 14 லைட்டர்கள்,12 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம், இரண்டு செல்லிடப்பேசிகள், போதை பொருட் குடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள்,போதை பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தும் பொலிதீன்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொலைபேசி வலையமைப்பு ஊடாகவே போதைப்பொருள் விற்பனை இடம்பெற்றுவந்துள்ளது என சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான போதைப்பொருள் வியாபாரி நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்










